Wednesday, September 2, 2009

Saturn Transit 2009 for Libra

Saturn transit is considered important in Indian astrology. It will bring about major changes in individuals life. Saturn enters (sani peyarchi 2009) Virgo from leo in the month of september, 2009. Here is the predictions in Tamil. The prediction are for 2.5 years from sep, 2009. These are general prediction based on your rashi. For detailed horoscope analysis and specific reports on career/job, family, health please contact me: sundaracm@gmail.com

ஏழரை சனி உங்களுக்கு தொடங்குகிறது. முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி, அடுத்து வருவது ஜென்ம சனி, அதன் பிறகு குடும்ப சனி. நீங்கள் சுக்ரனின் ஆதிக்கம் பெற்றவர்கள். சுய ஜாதகத்தில் சுக்ரனின் சார பலமறிந்து பரிகாரங்களை செய்தல் வெற்றி கிட்டும்.

விரைய சனி

சனி வந்துவிட்டதே என்று வருந்த வேண்டாம். முதல் சுற்று சனி நடந்தால் முக்கிய காரியங்களை யோசித்து செய்ய வேண்டும். வந்த சனியை வரவேற்க நீங்கள் பெயர்ச்சியாகும் நேரத்தில் சனியை வழிபடுங்கள்.

உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவன் புரட்டாசி 10 முதல் 12 இல் சஞ்சரிக்க போகிறார். 2, 6, 9 ஆகிய இடங்களை பார்க்கிறார்.

வாக்கு, தனம், குடும்பம், ரோகம், எதிர்ப்பு, ஜீவனம், தகப்பன், பூர்விகம் ஆகிய இடங்களில் மாற்றங்கள் ஏற்படும். கல்யாண கனவுகளை நனவாக்க முயற்சி எடுப்பீர்கள்.

வாகன மாற்றம் செய்வதன் மூலம் பழுது செலவுகளில் இருந்து தப்ப முடியும். சகோதரர்களிடம் விட்டு கொடுப்பது நல்லது.

சனி உங்கள் சுக ஸ்தானத்திற்கும் பஞ்சம ஸ்தானத்திற்கும் அதிபதியாகிறார். சனி விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொது உங்கள் உடல் நலத்திற்காகவும், உங்கள் குழந்தைகளின் உடல் நலத்திற்காகவும் பணம் செலவிட வேண்டிய நிலை உருவாக்கும். பிள்ளைகளால் தொல்லைகள் உருவாகலாம்.

சனி உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியாகிறார். அவர் புரட்டாசி மாதம் பதம் தேதி முதல் 12 இல் சஞ்சரித்தபடி 2, 7 ஆகிய இடங்களை பார்க்கிறார். அந்த இடங்களில் என்னென்ன ஆதிபதியாங்கள் இருக்கிறதோ அவற்றில் மாற்றங்களையும், திசை புக்தி வலு பெற்றவர்களுக்கு ஏற்றங்களையும் கொடுப்பார்.

உத்தியோகத்தில் இட மாற்றம் ஏற்படும். வரவை காட்டிலும் செலவு கூடும்.

பரிகாரம்: விரைய சனியின் ஆதிக்கத்தால் சுப விரயம் ஏற்படவும், சொல்லை செயலாக்கி கட்டவும், வெள்ளிக்கிழமை தோறும் விநாயகன், சிவன், பார்வதி ஆகியோரை வழிபாட்டு வாருங்கள்.

12 comments:

  1. Very nice post, Thnks for share this interesting post. Spiritual Healer - SpellsKing

    ReplyDelete

Custom Search

Contribute to Indian Astrology Research