Wednesday, September 2, 2009

Saturn Transit 2009 for Scorpio

Saturn transit is considered important in Indian astrology. It will bring about major changes in individuals life. Saturn enters (sani peyarchi 2009) Virgo from leo in the month of september, 2009. Here is the predictions in Tamil. The prediction are for 2.5 years from sep, 2009. These are general prediction based on your birth rashi. For detailed horoscope analysis and specific reports on career/job, family, health please contact me: sundaracm@gmail.com

விருச்சிகம்


லாப சனி
உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவன் இனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகிறார். அந்நிய நாட்டிலிருந்து தொழில், வேலை வாய்ப்புகள் வரலாம்.

உங்கள் ராசிக்கு பதினொன்றில் இருக்கும் சனி தன் பார்வையை 1, 5, 8 ஆகிய இடங்களில் பதிக்கிறார். ஜென்மத்தை பார்க்கும் சனியால் சிறு சிறு உடல் நல குறைவுகள் ஏற்படும்.

பதினொன்றில் சனி வந்தால் பண வரவு அதிகரிக்கும் என்றும், நதி போல துயர் விலகி நலம் யாவும் தேடி வரும் என்றும் முன்னோர் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

நிலுவையில் இருக்கும் கட்டிட வேலைகள் தொடர்ந்து நடைபெறும்.

உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதி சனி. அவர் லாப ஸ்தானத்தில் இருந்துகொண்டு 1, 5, 8 ஆகிய இடங்களை பார்க்கிறார்.

ஜென்ம ராசியை பார்க்கும் சனி சகாய ஸ்தானத்திற்கும், சுக ஸ்தானத்திற்கும் அதிபதியாக இருப்பதால் வசதி வாய்ப்புகளை அதிகரிக்க செய்வார். ஊர் மாற்றம், இட மாற்றங்களை ஏற்க வேண்டாம். எதிரிகள் விலகுவர். பூர்விக சொத்துகளை விற்று புதிய சொத்து வாங்குவீர்கள். பத்திரிக்கை, கலை, ஜோதிடம், மருத்துவம், ஆன்மிகம் போன்ற துறைகளை சார்ந்தவருக்கு பணம் பல வழிகளில் வரப்போகிறது.

வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் உருவாவார்கள்.

11 comments:

Custom Search

Contribute to Indian Astrology Research