Tuesday, September 1, 2009

Saturn Transit 2009 for Gemini



Saturn transit is considered important in Indian astrology. It will bring about major changes in individuals life. Saturn enters (sani peyarchi 2009) Virgo from leo in the month ஒப் september, 2009. Here is the predictions in Tamil. The prediction are for 2.5 years from sep, 2009. These are general prediction based on your rashi. For detailed horoscope analysis and specific reports on career/job, family, health please contact me: sundaracm@gmail.com

அர்த்தாஷ்டம சனி - இட மாற்றம்

உங்களுக்கு வரும் சனி பெயர்ச்சி, அர்த்தாஷ்டம சனியாக வருகிறது. இது அஷடம சனியில் பாதி பங்கு வலிமையுடையது. எனவே அது கடுமையாக இருக்குமோ என அஞ்ச வேண்டாம்.

உங்கள் ராசிக்கு 8 மற்றும் 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக சனி விளங்குகிறார். ஆயுள்காரகன் சனி ஆயுள் sthana அதிபதியாகவும் விளங்குவதால், சனியால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. பிரச்சினைகளை உருவாக்கி நல்ல முடிவுகளை கொண்டு வந்து சேர்க்கும். இட மாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகளால் இனிய பலன் கிட்டும்.

புரட்டாசி 10 ஆம் தேதி முதல் நான்காமிடத்தில் சஞ்சரிக்கும் சனி 1, 6, 10 ஆம் இடங்களை பார்க்கிறது.

அர்த்தாஷ்டம சனி ஆரோக்கியத்தை கெடுக்கும் இடம் என்பதால் வரும் முன் காக்க முயலுங்கள். நோய் அறிகுறி தென்படும்போது மருத்துவரை நாடி ஆலோசனை பெறவும்.

சனி உங்கள் ராசி நாதனுக்கு நண்பன். நண்பர்கள் தக்க சமயத்தில் கை கொடுத்து உதவுவது போல் நட்பு கிரகங்களும் உதவும். பரபரப்பை குறைத்து கொண்டு பணி புரிவது நல்லது.

சொத்துக்கள் வாங்குவதில் ஏமாற்றங்களை சந்திக்காதிருக்க பத்திரங்களை சரி பார்க்க வேண்டியது அவசியம். வாகன மாற்றம் நல்லது. பயணங்கள் அதிகரிக்கும்.

உங்கள் ரசியைய்ம், ஆறு மற்றும் பத்தாம் இடத்தை பார்க்கும் சனியால் பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். உடல் நிலை, எதிர்ப்பு, வியாதி, கடன், தொழில், செயல், புகழ், கீர்த்தி ஆகிய அதிபதியங்கள் தரும் இடங்களில் பெரும் மாற்றங்களை காணப் போகிறீர்கள்.

கூட்டு தொழில் செவோர் கணக்கு வழக்குகளை சரி பார்த்து கொள்வது நல்லது.

பரிகாரம்:
புதன்கிழமை தோறும் விஷ்ணுவை வழிபட்டு வாருங்கள்.

சேலம் அருகில் உள்ள நாமக்கல் சென்று அங்குள்ள வாரம் தரும் அனுமனை வழிபட்டு வாருங்கள்.

"அர்த்தஷ்டமத்தில் நானும்
அனுமனே உன்னை துதித்தேன்
வெற்றியை எனக்கு தந்தே
வேந்தனை வாழ வைப்பாய்!"

என்று வேண்டிக்கொள்ளுங்கள்

10 comments:

Custom Search

Contribute to Indian Astrology Research